இந்தியா

அமித்ஷா குறித்த அவதூறு பேச்சு வழக்கு.. ஜூன் 7 ஆம் தேதி நேரில் ஆஜராகும் ராகுல் காந்தி

Published On 2024-05-27 07:59 GMT   |   Update On 2024-05-27 07:59 GMT
  • இந்த வழக்கில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ராகுல் காந்தி நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் வாரண்ட் அனுப்பியது.
  • ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் நேரில் ஆஜராவதற்கு அவகாசம் வழங்குமாறு அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

 அமித் ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கு ஜூன் 7 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. தற்போது மத்திய உள்துறை அமைச்சராக உள்ள அமித் ஷா குறித்து கடந்த 2018 ஜூன் மாதம் பெங்களூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவதூறாக பேசியதாக அவர் மீது பாஜக பிரமுகர் விஜய் மிஸ்ரா என்பர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ராகுல் காந்தி நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் வாரண்ட் அனுப்பியது. இதனைத்தொடர்ந்து அந்த சமயத்தில் இந்தியா முழுவதும் நடந்து செல்லும் தேசிய ஒற்றுமைப் பயணத்தில் இருந்த ராகுல் காந்தி, அதை இடையில் நிறுத்திவிட்டு நீதிமன்றத்தில் ஆஜராகி இடைக்கால ஜாமீன் பெற்று மீண்டும் பயணத்தைக் தொடர்ந்தார்.

 

 

 இந்நிலையில், இன்று (மே 27) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் நேரில் ஆஜராவதற்கு அவகாசம் வழங்குமாறு அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

 

 

இதனை ஏற்று வழக்கு விசாரணையை ஜூன் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் ராகுல் காந்தி நேரில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News