இந்தியா

'குப்பையில் இருந்து தங்கம் உருவாக்கும் இயந்திரம்' - பாஜக அமைச்சரின் பேச்சுக்கு அகிலேஷ் கண்டனம்

Published On 2025-05-27 10:47 IST   |   Update On 2025-05-27 10:47:00 IST
  • குப்பைகளை அகற்றும் ஒப்பந்தங்களிலிருந்து கூட கமிஷன் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளனர்.
  • இதுபோன்ற கருத்துக்களைக் கேட்க உத்தரபிரதேசம் முழுவதும் பாக்கியம் பெற்றுள்ளது

"குப்பையில் இருந்து தங்கம் உருவாக்கும் இயந்திரத்தை மீரட்டில் தயாரித்து வருகிறோம். மிக விரைவில் அது பயன்பாட்டுக்கு வந்துவிடும்" என்று உத்தரபிரதேச பால்வளத்துறை அமைச்சர் தரம்பால் சிங் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பாஜக அமைச்சர் பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். .

அந்த எக்ஸ் பதிவில், "குப்பைகளை தங்கமாக மாற்றும் இயந்திரங்களைப் பற்றி பேசுவதற்கு முன்பு, கன்னோஜில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள ஒரு பால் ஆலையை செயல்படுத்தி விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கு தரம்பால் சிங் கவனம் செலுத்த வேண்டும்.

ஒருவேளை பாஜகவின் ஊழல் தற்போது மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது. அவர்கள் இப்போது குப்பைகளை அகற்றும் ஒப்பந்தங்களிலிருந்து கூட கமிஷன் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளனர் .இதுபோன்ற கருத்துக்களைக் கேட்க உத்தரபிரதேசம் முழுவதும் பாக்கியம் பெற்றுள்ளது" என்று கிண்டலாக தெரிவித்தார்.

Tags:    

Similar News