இந்தியா
null

லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மீண்டும் மும்பை திரும்பியது.. பல விமானங்கள் பாதிப்பு!

Published On 2025-06-13 10:04 IST   |   Update On 2025-06-13 10:42:00 IST
  • பல விமானங்கள் திருப்பி விடப்படுகின்றன அல்லது அவற்றின் சொந்த இடங்களுக்குத் திரும்புகின்றன.
  • பயணிகளை அவர்களின் இடங்களுக்கு அழைத்துச் செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன

மும்பையிலிருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட மூன்று மணி நேரம் ஆகாயத்தில் இருந்த பிறகு மீண்டும் மும்பைக்குத் திரும்பியது.

Flightradar24 இன் தரவுகளின்படி, மும்பையிலிருந்து லண்டனுக்குச் சென்ற விமானம் காலை 5:39 மணிக்கு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, மூன்று மணி நேரம் காற்றில் இருந்த பிறகு திரும்பியது.

இதுகுறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரானில் நிலவும் சூழ்நிலை மற்றும் அதன் வான்வெளி மூடப்பட்டதால், அதன் பல விமானங்கள் திருப்பி விடப்படுகின்றன அல்லது அவற்றின் சொந்த இடங்களுக்குத் திரும்புகின்றன. பயணிகளை அவர்களின் இடங்களுக்கு அழைத்துச் செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன" என்று கூறப்பட்டுள்ளது. இதுவரை 16 விமானங்கள் இவ்வாறு திருப்பிவிடப்பட்டகாக கூறப்படுகிறது.

ஆபரேஷன் ரைசிங் லயன் என்று பெயரில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இன்று அதிகாலை இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதன் சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஈரானிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நாட்டின் வான்வெளியை மூடுவதாக அறிவித்தது.

Tags:    

Similar News