மது வாங்க 10 ரூபாய் தர மறுத்த நபரை கத்தியால் குத்திக் கொன்ற 17 வயது சிறுவன்.. ஆந்திராவில் அதிர்ச்சி
- மதுக்கடை ஒன்றின் அருகே நின்று கொண்டிருந்தார்.
- அப்போது அங்கு போதையில் தள்ளாடியபடி வந்த 17 வயது சிறுவன், மேலும் மது வாங்க ரூ.10 கேட்டுள்ளார்.
ஆந்திராவில் மது வாங்க 10 ரூபாய் தராத ஆத்திரத்தில், 49 வயது நபரை 17 வயது சிறுவன் குத்திக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த தாத்தாஜி (49) என்ற நபர் நேற்று முன்தினம் மதுக்கடை ஒன்றின் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு போதையில் தள்ளாடியபடி வந்த 17 வயது சிறுவன், மேலும் மது வாங்குவதற்காக தாத்தாஜியிடம் 10 ரூபாய் கேட்டுள்ளான். தாத்தாஜி பணம் தர மறுத்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தாத்தாஜி அந்தச் சிறுவனை அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த சிறுவன், அங்கிருந்து சென்று ஒரு கத்தியை எடுத்து வந்து, மதுக்கடைக்கு சற்று தொலைவில் வைத்து தாத்தாஜியை சரமாரியாகக் குத்தினான். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறுவனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.