இந்தியா
114 புதிய ரபேல் போர் விமானங்கள் தேவை.... மத்திய அரசுக்கு இந்திய விமானப்படை பரிந்துரை
- பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் ரபேல் போர் விமானங்களை தயாரிக்கிறது.
- இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ரபேல் போர் விமானங்களை வாங்கியுள்ளன.
விமானங்களில் உலக அளவில் பிரபலமான 'பிராண்டு' ரபேல் விமானங்கள் ஆகும். பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. இதன் தயாரிப்பில் போர் விமானங்களும், சிவில் விமானங்களும் வருகின்றன. இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ரபேல் போர் விமானங்களை வாங்கியுள்ளன.
இந்நிலையில், சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான 114 புதிய ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் திட்ட அறிக்கையை இந்திய விமானப்படை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இந்திய நிறுவனங்கள் இணைந்து உள்நாட்டில் தயாரிக்க திட்டம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.