இந்தியா

ஆதாரை 12வது ஆவணமாக கருத வேண்டும், ஆனால்... உச்ச நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

Published On 2025-09-08 17:32 IST   |   Update On 2025-09-08 17:32:00 IST
  • முன்னதாக ஆதார் அட்டை, குடியுரிமை ஆவணமாக கருதப்படாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
  • வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தில், ஆதார் அட்டையையும் அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலின் சிறப்பு விரிவான திருத்தத்தை (SIR) நடத்திய தேர்தல் ஆணையம் (EC), இந்த மாதம் 1 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.

இந்நிலையில் பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தில், ஆதார் அட்டையையும், EPIC நம்பர்களையும் அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், பீகார் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்காளர் பட்டியலில் விபர சரிபார்ப்புக்கு ஆதார் அட்டையை 12வது ஆவணமாக கருத தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இருப்பினும் , ஆதார் விபரங்களின் உண்மைத்தன்மையை உறுதிபடுத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்பதை தெளிவுபடுத்தியதுடன், ஆதார் குடியுரிமைக்கான சான்றாக ஏற்றுக் கொள்ளப்படாது எனவும் தெரிவித்தது.

Tags:    

Similar News