இந்தியா
77-வது குடியரசு தினம்: தேசியக் கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
- கடமைப்பாதையில் 21 குண்டுகள் முழங்க தேசியக்கொடியை ஏற்றினார்.
- தேசியக்கொடிக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டன.
நாட்டின் 77-வது குடியரசு தினத்தையொட்டி டெல்லி கடமைப்பாதையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மூவர்ண கொடியை ஏற்றினார்.
கடமைப்பாதையில் 21 குண்டுகள் முழங்க குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அப்போது, டெல்லி கடமைப்பாதையில் பட்டொளி வீசிப்பறக்கும் தேசியக்கொடிக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டன.