இந்தியா

பெங்களூருவில் 3.35 லட்சம் பேர் கட்டணம் செலுத்தி பூஸ்டர் தடுப்பூசி போட்டனர்

Published On 2022-07-16 02:23 GMT   |   Update On 2022-07-16 02:23 GMT
  • நேற்று முதல் இலவச பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி இருக்கிறது.
  • பெங்களூருவை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் வெறும் 60 ஆயிரம் போ் மட்டுமே பூஸ்டா தடுப்பூசி போட்டுள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் நாட்டிலும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாகவும், 75-வது சுதந்திர தினத்தையொட்டியும் நாடு முழுவதும் 18 வயது மேற்பட்டோருக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதையடுத்து, நேற்று முதல் இலவச பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி இருக்கிறது. முன்னதாக 2 டோஸ் தடுப்பூசியை இலவசமாக பொதுமக்கள் போட்டுக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது. பூஸ்டர் தடுப்பூசியை கட்டணம் செலுத்தி பொதுமக்கள் போட்டுக் கொள்ளலாம் என்றும், இதற்காக தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் கட்டணம் செலுத்தி பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்வதற்கு பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் மக்கள் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தனர். அதன்படி, கர்நாடகத்தில் கடந்த 3 மாதங்களில் 3.97 லட்சம் பேர் மட்டுமே கட்டணம் செலுத்தி பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக் கொண்டு இருந்தார்கள். இவர்களில் பெங்களூருவில் மட்டும் 3.35 லட்சம் பேர் கட்டணம் கொடுத்து பூஸ்டர் தடுப்பூசி போட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

பெங்களூருவை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் வெறும் 60 ஆயிரம் போ் மட்டுமே பூஸ்டா தடுப்பூசி போட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக பெங்களூருவில் தனயார் மருத்துவமனைகள் அதிகமாக இருப்பதும் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதாவது பெங்களூருவில் உள்ள 130 மருத்துவமனைகளில் 110 மருத்துவமனைகளில் பூஸ்டா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News