இந்தியா

52 வயது காதலியை கொன்ற 26 வயது இளைஞர் - இன்ஸ்டாவில் Filter மூலம் ஏமாந்ததால் வெறிச்செயல்

Published On 2025-09-03 14:06 IST   |   Update On 2025-09-03 14:06:00 IST
  • 52 வயதான ராணி தனது வயதை மறைத்து Filter மூலம் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பதிவிட்டுள்ளார்.
  • 52 வயதான ராணிக்கு 4 குழந்தைகள் இருப்பது அருணுக்கு தெரிய வந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அருண் (26) என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் ராணி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

52 வயதான ராணி என்ற பெண் தனது வயதை மறைத்து Filter மூலம் புகைப்படத்தை பதிவேற்றி இளம்பெண் போல அருணை ஏமாற்றி வந்துள்ளார்.

முதல்முறையாக ராணியை அருண் நேரில் சந்தித்தபோதே அவளுக்கு 52 வயது என்றும் 4 குழந்தைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை கண்டு கோபமடைந்த அருண், ராணியை ஏமாற்றி அவரிடம் இருந்து ரூ.1.5 லட்சம் பெற்றுள்ளார்.

பின்னர் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் அருணை ராணி அடிக்கடி வற்புறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அருண், ராணியை ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்து சென்று அவரது தாவணியை வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை தூக்கி வீசியுள்ளார்.

ராணியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார் அருணை கைது செய்தனர். கொலை செய்ததை அருண் ஒப்புக்கொண்டதால் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News