செய்திகள்

குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் 100 தோப்புக்கரணம் போடவேண்டும் - மோடிக்கு மம்தா சவால்

Published On 2019-05-09 12:39 GMT   |   Update On 2019-05-09 13:20 GMT
மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, எங்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் 100 தோப்புக்கரணம் போடவேண்டும் என பிரதமருக்கு சவால் விடுத்தார். #LokSabhaElections2019 #MamataBanerjee #Modi
கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இன்னும் இரண்டு கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் பான்குரா பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசாரத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:



பிரதமர் மோடி அவர்களே, நிலக்கரி சுரங்க ஊழலில் எங்களுக்கு பங்குண்டு என நீங்கள் கூறியதை நிரூபிக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டை நீங்கள் நிரூபித்து விட்டால், 42 தொகுதிகளிலும் வேட்பாளர்களை வாபஸ் பெற்று விடுகிறேன்.

அப்படி இல்லையென்றால், பொதுமக்கள் மத்தியில் நீங்கள் காதை பிடித்துக் கொண்டு 100 முறை தோப்புக்கரணம் போட வேண்டும். எனது சவாலுக்கு நீங்கள் தயாரா? என கேள்வி எழுப்பினார். #LokSabhaElections2019 #MamataBanerjee #Modi
Tags:    

Similar News