புதிய ஓய்வூதிய திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி!
- கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- முதலமைச்சருக்கு இனிப்பு ஊட்டி அரசு ஊழியர் சங்கத்தினர் நன்றியை தெரிவித்தனர்.
சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வூதியம் தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தில், 10 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் ஓய்வூதியம், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்துக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம், கடைசி மாத ஊதியத்தில் 50 விழுக்காடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய ஓய்வூதிய திட்டம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அரசு ஊழியர்களின் அடிவயிற்றில்
பால் வார்த்துள்ளார் நம் முதலமைச்சர். அரசு ஊழியர்களின் நெடுங்கால கோரிக்கையான ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற முன்வந்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.