இந்தியா

ஞானேஷ் குமார் மந்திரவாதி: பாஜக எம்.பி.க்கள் பாம்புகள்- அபிஷேக் பானர்ஜி கடும் தாக்கு

Published On 2026-01-03 18:23 IST   |   Update On 2026-01-03 18:23:00 IST
  • ஞானேஷ் குமார் உங்களுக்கு தெரியுமா?. அவர் ஒரு மந்திரவாதி.
  • அவரால் உயிரோடு வாழ்பவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து மறைய வைக்க முடியும்.

மேற்கு வங்கத்தில் மார்ச்- ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., அபிஷேக் பானர்ஜி பெங்கால் மீண்டும் வெற்றி பெறும் என்ற பெயரில் 19 நாட்கள் மாநிலம் தழுவிய பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த 19 நாட்களில் 26 இடங்களில் நடைபெறும் பேரணியில் கலந்து கொண்டு பேசுகிறார்.

இன்று அவரது 2-வது பேரணி அலிபுர்துவாரில் நடைபெற்றது. இது பாஜக ஆதிக்கம் செலுத்தும் பகுதியாகும்.

பேரணியின் கலந்து கொண்டு அபிஷேக் பானர்ஜி பேசியதாவது:-

ஞானேஷ் குமார் உங்களுக்கு தெரியுமா?. அவர் ஒரு மந்திரவாதி. அவரால் உயிரோடு வாழ்பவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து மறைய வைக்கவும், இறந்து போனவர்களை நடமாட வைக்கவும் முடியும். அவர் தற்போது Vanish குமார்.

10 வருடத்திற்கு முன்னதாக, கனவுகளை காட்டி மக்களை வரிசையில் காத்திருக்க வைத்தனர். அதில் இருந்து கருப்புப் பணம் அதிகரித்துள்ளது. 10 வருடத்திற்குப் பிறகு, SIR என்ற பெயரில் வரிசையில் காத்திருக்க வைத்துள்ளனர். முன்னதாக, மக்கள் அரசை தேர்வு செய்தனர். தற்போது, அரசு யார் வாக்காளர்கள் என்பதை முடிவு செய்ய விரும்புகின்றனர்.

பாஜக எம்.பி.க்கள் மற்றும் பாம்புகள் ஒன்றுதான். ஒன்றிரண்டு பாம்புகளை உங்களது வீட்டிற்கு பின்னால் விட்டிருந்தாலும், பாம்பு பாம்பாகத்தான் இருக்கும். நீங்கள் கொடுக்கும் பால் மற்றும் பழங்களை சாப்பிடும். பின்னர் அது உங்களையே கடிக்கும். இந்த முறை பாம்புகளுக்கு வாய்ப்பு வழங்காதீர்கள். திரிணாமுல் காங்கிரஸ்க்கு வாய்ப்பு கொடுங்கள். உங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறினால், அடுத்த முறை எங்களை நீக்குங்கள்.

இவ்வாறு அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார்.

Tags:    

Similar News