செய்திகள்

வாரணாசியில் 25-ந்தேதி மோடி பிரமாண்ட பேரணி

Published On 2019-04-08 09:28 GMT   |   Update On 2019-04-08 09:28 GMT
வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஒருநாள் முன்பு அதாவது 25-ந்தேதி மோடி அங்கு பிரமாண்ட பேரணி நடத்துகிறார். #Loksabhaelections2019 #PMModi #Varanasi
வாரணாசி:

பிரதமர் நரேந்திரமோடி கடந்த பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி, குஜராத் மாநிலம் வதோதரா ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.

இதில் இரண்டிலும் வெற்றி பெற்றார். பின்னர் வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 2-வது முறையாக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் கடைசி கட்டமாக மே 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில் வாரணாசி தொகுதியில் மோடி வருகிற 26-ந்தேதி மனு தாக்கல் செய்கிறார்.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஒருநாள் முன்பு அதாவது 25-ந்தேதி மோடி வாரணாசியில் பிரமாண்ட பேரணி நடத்துகிறார். அவர் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.

வாரணாசியில் உள்ள லங்காசிராசிலுவில் இருந்து தஷாவாடூத் வரை மோடி பேரணியாக சென்று பிரசாரம் செய்கிறார். இதில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட மத்திய மந்திரிகள், உ.பி.மாநில மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.

26-ந்தேதி காலையில் காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்த பிறகு மோடி மனு தாக்கல் செய்கிறார். #Loksabhaelections2019 #PMModi #Varanasi
Tags:    

Similar News