செய்திகள்

ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வரி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியது

Published On 2019-01-31 18:23 IST   |   Update On 2019-01-31 18:23:00 IST
இந்த ஆண்டு ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலாகியிருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. #GST #January2019
புதுடெல்லி :

நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.), கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமலுக்கு வந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வசூல் நிலவரத்தை மத்திய நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டது.



இந்த ஆண்டின் ஜனவரி மாத ஜி.எஸ்.டி வரி வசூல், ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. வரி வசூல், ஜூலை மாதத்தில் ரூ.95 ஆயிரம் கோடியாகவும், ஆகஸ்டு மாதத்தில் ரூ.91 ஆயிரம் கோடியாகவும், செப்டம்பர் மாதம் ரூ.92,150 கோடியாகவும், அக்டோபர் மாதம் ரூ.83 ஆயிரம் கோடியாகவும், நவம்பர் மாதம் ரூ.80,808 கோடியாகவும், டிசம்பர் மாதத்தில் ரூ.94 ஆயிரம் கோடியாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #GST #January2019
Tags:    

Similar News