வணிகம் & தங்கம் விலை

இன்று ஒரே நாளில் இரண்டு முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 99,840-க்கு விற்பனை

Published On 2025-12-31 16:41 IST   |   Update On 2025-12-31 16:42:00 IST
  • தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 400 குறைந்தது.
  • இன்று மாலை மேலும் 560 ரூபாய் சவரனுக்கு குறைந்தது.

தங்கம், வெள்ளி விலை கடந்த ஒரு மாதமாக 'கிடுகிடு'வென உயர்ந்து வந்தது. தினமும் புதிய உச்சத்தை கடந்த வண்ணமே விலை பயணம் ஆனது. தங்கத்தை பொறுத்தவரையில், கடந்த 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800-க்கு விற்பனை ஆனது புதிய உச்சமாக பார்க்கப்பட்டது.

கொஞ்சமாவது விலை குறையாதா? என பார்த்து கொண்டிருந்த நேரத்தில் நேற்று தங்கம் விலை அதிரடியாக சரிந்து இல்லத்தரசிகள், மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.420-ம், சவரனுக்கு ரூ.3 ஆயிரத்து 360-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 800-க்கும் விற்பனை ஆனது.

இந்நிலையில் தங்கம் விலை இன்று காலையும் குறைந்தது சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.12,550-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,400-க்கு விற்பனையானது.

இந்த நிலையில் இன்று மாலை மீண்டும் தங்கம் விலை குறைந்தது. ஒரு சவரனுக்கு ரூ. 560 குறைந்தது. இதனால் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 960 ரூபாய் குறைந்தது, தற்போது ஒரு சவரன் 99 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

30-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800

29-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,160

28-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800

27-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800

26-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,120

Tags:    

Similar News