கிடுகிடுவென உயரும் தங்கம் விலை: இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 உயர்வு!
- கிராமுக்கு ரூ. 290 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,900க்கு விற்பனை
- கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 330 ரூபாய்க்கு விற்பனை
கடந்த சிலநாட்களாகவே தங்கத்தின்விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துவருகிறது. 50 ஆயிரம், 60 ஆயிரம் என உயர்ந்து தற்போது 1 லட்சத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. இதனால் சாமானிய மக்கள் பெரிதும் கவலை அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஒருநாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்துள்ளது. இன்று காலை கிராமுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,610-க்கும், சவரனுக்கு 1,280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில் தற்போது கிராமுக்கு ரூ. 290 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,900க்கும், சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து ரூ.1,11,200க்கும் விற்பனையாகிறது.
தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வரும் வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 330 ரூபாய்க்கும், பார் வெள்ளி 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.