எனது தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஷியாம் ஜாக் என்பவருக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது: ரவி மோகன்
நடிகரும், தயாரிப்பாளருமான ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொதுமக்கள், திரைப்படத் துறையினர், ஊடகங்கள், ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் இதன் மூலம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படுவது என்னவென்றால்,
ஷியாம் ஜாக் (Shiyam Jack) என்பவருக்கு ரவி மோகன், ரவி மோகன் ஸ்டூடியோஸ், ரவி மோகன் ஃபவுண்டேஷன் அல்லது ரவி மோகன் ரசிகர் மன்றம் ஆகியவற்றுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவிதமான தொடர்பும் இல்லை.
ஷியாம் ஜாக் இத்தகைய தொடர்பு இருப்பதாக கூறுவது அல்லது தெரிவிப்பது முற்றிலும் தவறானதும் அனுமதியற்றதும் ஆகும்.
மேலே குறிப்பிடப்பட்ட நபர்கள், நிறுவனங்கள் அல்லது செயல்பாடுகள் தொடர்பாக ஷியாம் ஜாக்கை தொடர்பு கொள்ளுதல், அவருடன் எந்தவிதமான உடன்பாடு, ஒத்துழைப்பு அல்லது பரிவர்த்தனைகளில் ஈடுபடுதல் ஆகியவற்றை பொதுமக்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வகையான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படின், அதற்கான முழுப் பொறுப்பும் சம்பந்தப்பட்ட நபரையே சாரும். பெயர், புகழ் மற்றும் நற்பெயரை தவறாக பயன்படுத்துவதையும், தவறான புரிதல்களையும் தவிர்க்கும் பொருட்டு இவ்வறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இவ்வாறு ரவி மோகன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.