சினிமா செய்திகள்
தாய் கிழவி படத்தை தொடர்ந்து தான் தயாரிக்கும் அடுத்த படத்தின் இயக்குநரை அறிமுகப்படுத்திய SK
- தாய் கிழவி படம் உலக அளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது.
- தாய் கிழவி படத்தின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெளியான 10 நாட்களில் உலக அளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது.
இந்நிலையில், தாய் கிழவி படத்தின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனரை சிவகார்த்தியன் அறிமுகப்படுத்தினார்.
SK புரொடக்சன்ஸ் தயாரிக்கும் 10 ஆவது படத்தை அம்மாமுத்து சூர்யா இயக்குவார் என்று மேடையில் வைத்து அவரை சிவகார்த்திகேயன் அறிமுகப்படுத்தினார்.