செய்திகள்

காஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை

Published On 2018-10-18 04:38 GMT   |   Update On 2018-10-18 07:39 GMT
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று தெஹ்ரீக் அல் முஜாகிதீன் பயங்கரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது நடந்த சண்டையில் தெஹ்ரீக் அல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த சவுகத் அகமது பட் என்ற பயங்கரவாதியை சுட்டுக் கொன்றனர். 

அவனிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவன் பாரமுல்லாவில் நேற்று போலீசார் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்கிய சம்பவத்தில் தேடப்பட்டு வந்தவன்.

நேற்று பாரமுல்லா மாவட்டத்தில் போலீசார் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி  தாக்கினர். இந்த தாக்குதலில் மூன்று போலீசார் காயமடைந்தனர். பின்னர் பயங்கரவாதிகளை போலீசார் துரத்திச் சென்றனர். இதில் பைசான் மஜீத் பட் என்பவன் சிக்கினான். தப்பி ஓடிய அவனது கூட்டாளியான சவுகத் அகமது பட் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டுள்ளான்.

ஸ்ரீநகரின் பதே கதல் பகுதியில் நேற்று பாதுகாப்பு படையினரும், போலீசாரும் நடத்திய கூட்டு தேடுதல் வேட்டையில்  2 பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய கூட்டாளி சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் ஒரு போலீஸ்காரரும் உயிரிழந்தார். நடத்திய பதில் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து அங்கு தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது. #JKAttack #JKEncounter
Tags:    

Similar News