தமிழ்நாடு செய்திகள்
துணைவேந்தர் நியமனம்... 3 ஆண்டுகளுக்கு பின்னர் மசோதாவை திருப்பி அனுப்பிய குடியரசுத் தலைவர்!
- அப்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியால் அறிமுகம் செய்யப்பட்டது.
- 3 ஆண்டு காலம் மசோதா நிலுவையில் இருந்தநிலையில் தற்போது திருப்பி அனுப்பியுள்ளார்
சென்னை பல்கலை. துணைவேந்தர் நியமனம் தொடர்பான மசோதாவை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பினார்.
சென்னை பல்கலை கழகத்தின் துணை வேந்தரை நீக்கவும், நியமிக்கவும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில், அப்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடியால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாமீது விவாதங்கள் நடத்தப்பட்டு, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அவர் ஒப்புதலுக்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பினார்.
இந்நிலையில் சுமார் 3 ஆண்டு காலம் மசோதா நிலுவையில் இருந்தநிலையில் தற்போது திருப்பி அனுப்பியுள்ளார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.