செய்திகள்

ரூ.45 ஆயிரம் கோடி மோசடி செய்த அம்பானிக்கு ஒப்பந்தம் வழங்குவதா? பிரதமர் மோடிக்கு ராகுல் கண்டனம்

Published On 2018-10-04 11:26 IST   |   Update On 2018-10-04 11:26:00 IST
ரூ.45 ஆயிரம் கோடி மோசடி செய்த அம்பானிக்கு ரபேல் போர் விமான ஒப்பந்தங்களை வழங்கியதால் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். #RahulGandhi #Modi #RafaleDeal
புதுடெல்லி:

ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ‘ரிலைன்ஸ் டிபன்ஸ்’ நிறுவனத்துக்கு வரம்புகளை மீறி சலுகை வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில், மொலைத் தொடர்பு சாதனங்கள் தயாரிக்கும் சுவீடன் நாட்டை சேர்ந்த எரிக்சன் நிறுவனம், அனில் அம்பானியின் ஆர்காம் நிறுவனத்தின் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுதொடர்பாக கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆர்காம் நிறுவனம் ஒப்புக்கொண்டபடி 550 கோடி ரூபாயை எங்கள் நிறுவனத்துக்கு தரவில்லை. எனவே அனில் அம்பானி மற்றும் அவரது 2 உயர் அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்த செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அனில் அம்பானியை கண்டிக்கும் விதமாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-



இந்தியாவின் மிகப்பெரிய ராணுவ ஒப்பந்தங்களை பெற வேண்டும் என்றால் அதற்கு ரூ.45 ஆயிரம் கோடி மோசடி செய்தவராக இருக்க வேண்டும். நிலுவைத் தொகை செலுத்தாததன் காரணமாக நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். பிரதமர் மோடியால் ‘பாய்’ என்று அழைக்க வேண்டும். தகுந்த அனுபவம் இல்லாதவராக இருக்க வேண்டும். பிரதமர் இந்த விதிகளை வகுத்துள்ளார்.

இவ்வாறு ராகுல் அதில் குறிப்பிட்டுள்ளார்.  #RahulGandhi #Modi #RafaleDeal
Tags:    

Similar News