இந்தியா
புத்தாண்டு அனைவருக்கும் வெற்றியுடன் கூடிய நிறைவான வாழ்வை கொண்டு வரட்டும் - பிரதமர் மோடி
- பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- நமது சமூகத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சி நிலவ இறைவனை வேண்டுகிறேன்.
2025-ம் ஆண்டு விடைபெற்று 2026-ம் ஆண்டு இனிதே பிறந்துள்ளது. உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது. மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
அனைவருக்கும் 2026 வாழ்த்துகள்!
இந்த புத்தாண்டு அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் வெற்றியுடன் கூடிய நிறைவான வாழ்வை கொண்டு வரட்டும்.
நமது சமூகத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சி நிலவ இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.