செய்திகள்

மோடியும் பட்னாவிசும் சர்வாதிகாரிகள் - சிவசேனா காட்டம்

Published On 2018-06-29 11:42 GMT   |   Update On 2018-06-29 11:42 GMT
பிரதமர் மோடியும், முதல் மந்திரி பட்னாவிசும் சர்வாதிகாரிகள் போல் செயல்பட்டு வருகின்றனர் என சிவசேனா கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். #Emergency #Saamana #PMModi #DevendraFadnavis
மும்பை:

நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தபட்ட நாளை கருப்பு தினமாக அனுசரித்த பாஜகவினர், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை விமர்சித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தனர். பிரதமர் மோடியும், மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசும் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், நெருக்கடி நிலை காலத்தில் இருந்த நிலைமை தற்போதும் நீடித்து வருகிறது. பிரதமர் மோடியும், முதல் மந்திரி பட்னாவிசும் சர்வாதிகாரிகள் போல் செயல்பட்டு வருகின்றனர் என சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. 

இதுதொடர்பாக சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாமனாவில் உள்ள தலையங்கத்தில் கூறியதாவது:



பிரதமர் மோடியும், முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசும் சர்வாதிகாரிகள் போல் செயல்பட்டு வருகின்றனர். 43 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற எமர்ஜென்சி குறித்து அவர்கள் இப்போது பேசுவது கேலிக்கூத்தாக இருக்கிறது. 

ஜனநாயக நாட்டில் மக்கள் செத்து மடிந்தால் பரவாயில்லை, ராஜாக்கள் வாழ்ந்தால் போதும். நமது ராணுவ வீரர்களும் விவசாயிகளும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெய் ஜவான், ஜெய் கிசான் ( ராணுவ வீரர்கள் வாழ்க, விவசாயிகள் வாழ்க) என்ற முழக்கமும் செத்துக் கொண்டிருக்கிறது.

மக்கள் எதிர்ப்பை மீறி ரத்னகிரி பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திறப்பது புற்றுநோய் மருத்துவமனையை திறப்பதற்கு சமமாகும் என தெரிவித்துள்ளது. #Emergency #Saamana #PMModi #DevendraFadnavis
Tags:    

Similar News