ஆபரேஷன் சிந்தூரில் சுட்டுவீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் டிரோனை முதல் முறையாக காட்சிக்கு வைத்த இந்திய ராணுவம்
- விஜய் திவாஸ் விழாவை முன்னிட்டு டெல்லியில் ராணுவத் தலைவர்
- இதன் இறக்கைகள் சுமார் இரண்டு மீட்டர். இந்த டிரோன்கள் 170 சிசி இயந்திரங்களால் இயக்கப்படுகின்றன.
இந்த ஆண்டு ஏப்ரலில் 26 பேர் கொல்லப்பட்ட காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக மே மாதம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது.
இதற்கு பதிலடியா இந்திய ராணுவ தளங்கள் மற்றும் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் நூற்றுக்கணக்கான டிரோன்களை ஏவியது.
இந்த டிரோன்களை இந்திய ராணுவம் திறம்பட சுட்டு வீழ்த்தியது. தற்போது, அவற்றில் ஒன்றை டெல்லியில் ராணுவத் தலைவர் ஜெனரல் உபேந்திர திவேதி காட்சிப்படுத்தியுள்ளார்.
துருக்கியில் தயாரிக்கப்பட்ட பாகிஸ்தானின் டிரோன்களைப் நடுவானில் சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் அதில் ஒரு டிரோனை துண்டுகளிலிருந்து மீண்டும் உருவாக்கியது.
இன்று நவம்பர் 15 விஜய் திவாஸ் விழாவை முன்னிட்டு டெல்லியில் ராணுவத் தலைவர் நேற்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் இது காட்சிப்படுத்தப்பட்டது.
பஞ்சாபில் உள்ள ஜலந்தரை குறிவைத்து லாகூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்த டிரோன் ஏவப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் இறக்கைகள் சுமார் இரண்டு மீட்டர். இந்த வகை டிரோன்கள் 170 சிசி இயந்திரங்களால் இயக்கப்படுகின்றன.
மே 10 அன்று விமானப் படையால் 2000 மீட்டர் உயரத்தில் இந்த டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.