2025 - ஒரு பார்வை

2025 REWIND: கனமழை, வெள்ளம், நிலச்சரிவு.. இந்த வருடம் இந்தியாவை சுழற்றி அடித்த இயற்கை பேரிடர்கள்!

Published On 2025-12-15 22:13 IST   |   Update On 2025-12-15 22:13:00 IST
  • கிஷ்த்வாரில் ஏற்பட்ட மேக வெடிப்பில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
  • கதுவா மற்றும் பிற பகுதிகளிலும் நிலச்சரிவுகளால் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டன.

2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் பல மாநிலங்களில் கடுமையான மழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டன. 

குறிப்பாக, இந்த ஆண்டில் பலத்த மழையால் வட இந்தியப் பகுதிகளில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.

வடமேற்குப் பிராந்தியம், குறிப்பாக இமயமலைப் பகுதிகளில் வழக்கத்தைவிட சுமார் 27% அதிக மழை பெய்தது. இது பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்குக் காரணமாக அமைந்தது.

இமாச்சலப் பிரதேசம்:

*மழையால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இமாச்சலப் பிரதேசமும் ஒன்றாகும்.

*வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 5,200 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

*செப்டம்பர் 2025 நிலவரப்படி, 355-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

*1,200 க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

*45 மேக வெடிப்புகள் (Cloudbursts) மற்றும் 132 பெரிய நிலச்சரிவுகள் இங்கு பதிவாகின.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்:

*பலத்த மேக வெடிப்புகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

*கிஷ்த்வாரில் ஏற்பட்ட மேக வெடிப்பில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

*கதுவா மற்றும் பிற பகுதிகளிலும் நிலச்சரிவுகளால் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டன.

*லடாக் பிராந்தியத்தில் வழக்கத்தைவிட 342% அதிக மழை பதிவானது.

உத்தரகாண்ட்:

*உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

*பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டன, சாலைகள் சேதமடைந்தன.

*இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை இயற்கைப் பேரழிவுகளால் 85 பேர் உயிரிழந்தனர். 

பஞ்சாப்:

*அண்டை மாநிலங்களில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதாலும், கனமழை காரணமாகவும் மாநிலத்தின் 1,400 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

பிற மாநிலங்களில் பாதிப்பு

அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள்:

ஜூன் மாதத்தில் பிரம்மபுத்திரா மற்றும் பாராக் உட்பட பல ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு, 8 லட்சம் பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டனர்.

கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் மழைப்பொழிவு இயல்பைவிட 20% குறைவாக இருந்தாலும், குறிப்பிட்ட பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

தமிழ்நாடு:

வடகிழக்குப் பருவமழையின் தொடக்கத்தில் (அக்டோபர் 2025) இயல்பை விட 36% கூடுதல் மழைப்பொழிவு பதிவானது.

லா நினா (La Niña) காலநிலை காரணமாக வடகிழக்குப் பருவமழையில் கூடுதல் மழை மற்றும் புயல் ஆபத்துகள் நெருங்கியது.

இதில், ராமநாதபுரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News