லத்தீன் அமெரிக்காவில் ஓங்கும் வலதுசாரிகளின் கை.. சிலி நாட்டு அதிபர் தேர்தலில் 'தீவிர' வலதுசாரி வெற்றி
- ஒன்பது குழந்தைகளின் தந்தையான 59 வயதான காஸ்ட், முன்பு இரண்டு முறை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
- லத்தீன் அமெரிக்காவில் வலதுசாரிக்கு இது முக்கிய வெற்றியாக அமைந்துள்ளது.
தென் அமெரிக்க நாடான சிலியில் வலதுசாரி வேட்பாளர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
தீவிர வலதுசாரியான கன்சர்வேடிவ் கட்சியின் ஜோஸ் அன்டோனியோ காஸ்டிலோ கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜீனெட் ஜாராவை தோற்கடித்து 58 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவது, வடக்கு எல்லையை மூடுவது, குற்ற விகிதங்களைக் குறைப்பது மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது போன்ற வாக்குறுதிகளுடன் காஸ்ட் பிரச்சாரம் செய்தார்.
ஒன்பது குழந்தைகளின் தந்தையான 59 வயதான காஸ்ட், முன்பு இரண்டு முறை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் தற்போது அவர் வெற்றி பெற்ற நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு அமெரிக்காவின் நிலையான நாடுகளில் ஒன்றாக இருந்த சிலி, கோவிட்-க்குப் பிறகு பொருளாதார சரிவை கண்டது.
அர்ஜென்டினா, பொலிவியா, ஹோண்டுராஸ், எல் சால்வடார் மற்றும் ஈக்வடார் தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு லத்தீன் அமெரிக்காவில் வலதுசாரிக்கு இது முக்கிய வெற்றியாக அமைந்துள்ளது.