செய்திகள்

நீதிபதியின் உறவினருக்கு லஞ்சம் கொடுத்ததாக பாஜக வேட்பாளர் மீது காங். புகார்

Published On 2018-05-11 11:23 GMT   |   Update On 2018-05-11 11:23 GMT
கர்நாடகா மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்ரீராமலு தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் இன்று கோரிக்கை விடுத்துள்ளது. #KarnatakaElection2018
பெங்களூரு:

கர்நாடகா மாநிலத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் இந்த தேர்தலுக்கென நடைபெற்ற அனல் பறக்கும் பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது.

பா.ஜ.க. சார்பில் பதாமி மற்றும் மொலகால்முரு தொகுதிகளில் போட்டியிடும் ஸ்ரீராமலு, சுரங்க வழக்கு ஒன்றில் முன்னாள் தலைமை நீதிபதியின் உறவினருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வீடியோ காட்சி நேற்று அம்மாநில தொலைக்கட்சிகளில் ஒளிபரப்பானது. இது அம்மாநிலத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையத்துக்கு இன்று சென்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான மோதிலால் வோரா, கபில் சிபில், முகுல் வாஸ்னிக், ரன்தீப் சிங், ஆர்பிஎன் சிங், பி.எல். புனியா ஆகியோர் ஸ்ரீராமலுவை தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும் என மனு அளித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் தேர்தல் ஆணையத்தில் அளித்திருந்த மனுவில், சட்ட ரீதியாக அனைத்து நடவடிக்கைகளையும் ஸ்ரீராமலுவுக்கு எதிராக எடுக்க வேண்டும் எனவும், அமைதியாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. #karnatakaelection2018 #Sriramulu #Congress #BJP
Tags:    

Similar News