இந்தியா

இமாச்சலில் சோகம்: நிலச்சரிவில் ஆம்னி பஸ் சிக்கி 18 பேர் பலி

Published On 2025-10-07 21:29 IST   |   Update On 2025-10-07 21:29:00 IST
  • நிலச்சரிவில் சிக்கிய ஆம்னி பஸ் முழுவதையும் மண் மூடியது.
  • மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சிம்லா:

இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டம் மொரோடன் நகரில் இருந்து குலு மாவட்டம் கலல் நகருக்கு இன்று மாலை ஆம்னி பஸ் சென்றுகொண்டிருந்தது. அதில் 20-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

பிலாஸ்பூரின் பாலு நகரில் உள்ள பாலம் அருகே மலைப்பாங்கான பகுதியில் பஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் ஆம்னி பஸ் சிக்கிக்கொண்டது. பாறைகள் விழுந்து பஸ் முழுவதும் மண் மூடியது.

தகவலறிந்த மீட்புக் குழுவினர் விரைந்து சென்றனர். அவர்கள் நிலச்சரிவால் மண்ணுக்குள் சிக்கிய பஸ்சில் இருந்தவர்களை மீட்க முயற்சித்தனர்.

இந்த சம்பவத்தில் பஸ்சில் பயணம் செய்த 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Tags:    

Similar News