உள்ளூர் செய்திகள்
மேலப்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டில் வாலிபர் கைது
- ஒரு மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பந்தமாக சுப்பிரமணியன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- மோட்டார் சைக்கிள் திருட்டில் முகமது ஹசன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
நெல்லை:
மேலப்பாளையம் போலீசார் கடந்த 2-ந்தேதி நடந்த ஒரு மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பந்தமாக விசாரணை நடத்தி சுப்பிரமணியன் என்பவரை கைது செய்தனர். அப்போது அவரிடம் நடத்திய விசாரணை யில், மோட்டார் சைக்கிள் திருட்டில் மேலப்பாளையம் பீடி காலனியை சேர்ந்த முகமது ஹசன்(வயது 27) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பவத்தன்று அவரிடம் விசாரணை செய்வதற்காக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரம்மநாயகம் தலைமையிலான போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர்.
அப்போது ஹசன் போலீ சாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவரை போலீசார் கைது செய்தனர்.