தமிழ்நாடு செய்திகள்

அன்புமணி நினைப்பு வந்துவிட்டால் தூக்க மாத்திரை போட்டாலும் தூக்கம் வருவதில்லை- ராமதாஸ்

Published On 2025-12-29 13:55 IST   |   Update On 2025-12-29 13:55:00 IST
  • நான் செய்த சத்தியத்தை இன்றுவரை காப்பாற்றிக்கொண்டே இருக்கிறேன்.
  • தைலாபுரத்தில் தினந்தோறும் என்னை வந்து சந்திக்கும் பா.ம.க.வினரை நினைத்தால் புத்துணர்ச்சி வந்துவிடுகிறது.

சேலம்:

பா.ம.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் ராமதாஸ் தொடர்ந்து பேசியதாவது:-

* 30 ஆண்டாக மக்களுக்காகவும், கட்சிக்காகவும் உழைத்த ஜி.கே.மணியை அவமானப்படுத்தினால் என்னால் பொறுக்க முடியாது.

* இந்த தேர்தலில் நல்ல கூட்டணி அமைப்பேன், நல்ல முடிவை அது கொடுக்கும்.

* என்னைப்போன்ற ஒரு தகப்பன் உலகில் வேறு யாருக்காவது உண்டா? அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்?

* அன்புமணி ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? என செல்லும் இடங்களில் எல்லாம் கேட்கிறார்கள்.

* நான் செய்த சத்தியத்தை இன்றுவரை காப்பாற்றிக்கொண்டே இருக்கிறேன்.

* அன்புமணியின் பின்னால் 5 சதவீதம் பேர் வட இல்லை. அவருக்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுக்கப்படும்.

* நான் நினைத்திருந்தால் இந்திய அளவில் எந்த பதவியில் வேண்டுமானாலும் அமர்ந்திருக்கலாம். ஆனால் அதை செய்யவில்லை.

* பதவிக்கு வரமாட்டேன் என்ற எனது சத்தியத்தால் தான் நீ 36 வயதில் மத்திய அமைச்சராக ஆனாய்.

* கூட்டணிக்கான காலம் இன்னும் கனியவில்லை, நான் நினைப்பது போன்ற வெற்றி தேர்தலில் கிடைக்கும்.

* அன்புமணி நினைப்பு வந்துவிட்டால், தூக்க மாத்திரை போட்டால் கூட தூக்கம் வருவதில்லை.

* தைலாபுரத்தில் தினந்தோறும் என்னை வந்து சந்திக்கும் பா.ம.க.வினரை நினைத்தால் புத்துணர்ச்சி வந்துவிடுகிறது என்றார். 

Tags:    

Similar News