உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.200 கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க இலக்கு

Published On 2022-12-08 08:20 GMT   |   Update On 2022-12-08 08:20 GMT
  • விவசாயிகளுக்கு ரூ.200 கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 180 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் தமிழக அரசின் வட்டியில்லா பயிர்க்கடன் திட்டம் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் நடப்பாண்டு ரூ.200 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் போதிய உரம் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு தற்போது வரை ரூ.135.30 கோடிக்கு பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.

எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி வட்டியில்லா பயிர்க்கடன் பெற்று பயனடைய அனைத்து விவசாயிகளுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கடன் தேவை யுள்ள விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் பயிர் அடங்கல், 10(1)சிட்டா, குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் 2 புகைப்படம் ஆகிய வற்றுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நேரில் விண்ணப்பித்து பயிர்க்க டன்கள் பெறலாம்.

கூட்டுறவு சங்கங்களில் இதுவரை பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உரிய பங்குத்தொகை செலுத்தி புதிய உறுப்பினர்களாக சேர்ந்து பயிர்க்கடன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News