தமிழ்நாடு செய்திகள்
மேட்டூர் அணை நீர்மட்டம் 95.67 அடியாக குறைந்தது
- அணைக்கு வெறும் 11 கனஅடி தண்ணீரே வந்து கொண்டு இருந்தது.
- அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதியில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. வருகிற 28-ந் தேதி வரை இந்த தண்ணீர் திறப்பு இருக்கும்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. அதன் படி இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 95.67 அடியாக குறைந்து காணப்பட்டது.
அணைக்கு வெறும் 11 கனஅடி தண்ணீரே வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 59.37 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.