உள்ளூர் செய்திகள்

திருட்டு நடந்த கோவிலை படத்தில் காணலாம்

கோவிலில் துணிகர திருட்டு

Published On 2023-01-03 13:53 IST   |   Update On 2023-01-03 13:53:00 IST
  • சாத்தூர் அருகே வடமலாபுரத்தில் உள்ளது சாமுண்டீஸ்வரி, சக்தி விநாயகர் கோவில்ல உள்ளது.
  • இந்த திருட்டுச் சம்பவம் குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாத்தூர்

சாத்தூர் அருகே வடமலாபுரத்தில் உள்ளது சாமுண்டீஸ்வரி, சக்தி விநாயகர் கோவில். இந்தக் கோவிலில் நேற்று வழக்கம் போல பூஜைகள் நடந்து முடிந்த பின்னர் இரவு பூசாரி கோவிலை பூட்டி விட்டுச் சென்றார். இன்று அதிகாலை மீண்டும் கோவிலை திறப்பதற்காக பூசாரி வந்தார்.

அப்போது முன்கதவில் பூட்டு உடைக்கப்பட்டு கீழே தனியாகக் கிடந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறிக் கிடந்தது. மேலும் பெரிய குத்துவிளக்கு, தீபாரானை தட்டு, மின் மோட்டார் ஆகியவை திருடு போயிருந்தது. யாரோ மர்ம நபர்கள் இரவு நேரத்தில் கோவிலில் இருந்த பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த திருட்டுச் சம்பவம் குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News