உள்ளூர் செய்திகள்

மைனர் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர்

Published On 2022-12-30 14:03 IST   |   Update On 2022-12-30 14:03:00 IST
  • விருதுநகரில் மைனர் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  • கர்ப்பிணியான சிறுமி சிகிச்சைக்காக ஸ்ரீவில்லி புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார்.

விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே உள்ள சேது நாராயணபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுமி 6-ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார். அவரது வீட்டுக்கு உறவினர் சுந்தர் என்பவர் அடிக்கடி வந்து சென்றார். அப்போது சிறுமிக்கும், சுந்தருக்கும் காதல் ஏற்பட்டதாக தெரி கிறது.இதற்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வீட்டை விட்டு சிறுமியுடன் வெளியேறிய சுந்தர் அங்குள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் சிறுமியுடன் சுந்தர் வத்திராயிருப்பில் தனி குடித்தனம் நடத்தி வந்தார். இதன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பமானார்.

கர்ப்பிணியான சிறுமி சிகிச்சைக்காக ஸ்ரீவில்லி புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். அங்கு அவரது வயது குறித்து அறிந்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக ஸ்ரீவில்லி புத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி மைனர் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய சுந்தர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News