10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
- 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை தேடி வருகின்றனர்.
- பாதிக்கப்பட் சிறுமியின் தாயார் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி அங்குள்ள தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று அவரது தாயார் அருகில் உள்ள பலசரக்கு கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வருமாறு சிறுமியிடம் கூறி உள்ளார். ஆனால் சிறுமி செல்ல மறுத்து அழுதார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் சிறுமியிடம் விசாரித்தபோது அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்திருக்கும் ரவி என்பவர் சிறுமியிடம் அத்துமீறி நடந்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதன் காரணமாக சிறுமி கடைக்கு செல்ல மறுத்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட் சிறுமியின் தாயார் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.