பணிநிரந்தரம் கோரி செவிலியர்கள் போராட்டம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை
- பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர் சங்கத்தினர் இன்று 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- சென்னை கிண்டியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் செவிலியர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.ஆர்.பி. செவிலியர்கள் 700-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டப்பட்டனர். அங்கேயும் செவிலியர்கள் போராட்டத்தை தொடர்ந்ததால் மீண்டும் கைது செய்யப்பட்டு ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதையடுத்து அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மண்டபத்தில் இருந்து வெளியேறிய செவிலியர்கள் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர் சங்கத்தினர் இன்று 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை கிண்டியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் செவிலியர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், செவிலியர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.