உள்ளூர் செய்திகள்

பெண்கள் உள்பட 3 பேர் மாயம்

Published On 2023-01-27 12:13 IST   |   Update On 2023-01-27 12:13:00 IST
  • பெண்கள் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
  • ராஜபாளையம் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ராஜபாளையம்

விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள காந்தி நகரில் தனியார் சிறுவர் காப்பகம் உள்ளது. இங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு ராஜபாளையத்தை சேர்ந்த சக்திவேல் மகன் மாசாணிமுத்து (வயது 15) சேர்க்கப்பட்டார். சம்பவத்தன்று காப்பகத்தில் இருந்த சிறுவன் திடீரென மாயமானார். இதுகுறித்து காப்பக நிர்வாகி அருணா கிரேசி கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் ஹரிப்பிரியா (19). தையல் கடையில் வேலை பார்த்து வந்த இவர் திடீரென மாயமானார். இதுகுறித்து சேத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராஜபாளையம் அருகே உள்ள சோலைசேரி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி பொன்னு லட்சுமி (24). குடும்ப பிரச்சினை காரணமாக மனவேதனையில் இருந்த இவர் திடீரென மாயமானார். ராஜபாளையம் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News