தமிழ்நாடு செய்திகள்

ரூ.12.16 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் ஈர்ப்பு: ஆளுநர் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்!

Published On 2026-01-20 14:03 IST   |   Update On 2026-01-20 14:03:00 IST
  • 1,176 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதுவரை மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
  • கடந்த 5 ஆண்டுகளில் 22 லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டு உள்ளன.

சட்டசபையில் ஆளுநர் உரையை சபாநயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அதில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:

* விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 41 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.

* மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு தொகை ரூ.2 ஆயிரம் ஆக அதிகரிப்பு.

* ரூ.12.16 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

* 1,176 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதுவரை மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

* 2640 மெகாவாட் மின் உற்பத்திக்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. உடன்குடி, எண்ணூர் அனல் மின் நிலைய பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

* நீர் மேலாண்மையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. அரசின் திட்டங்களால் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது.

* கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2086 கோடி செலவில் 121 தடுப்பணைகள், 101 அணைக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

* மதுரை, திருச்சி, ஓசூர் ஆகிய இடங்களில் புதிய டைடல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

* கடந்த 5 ஆண்டுகளில் 22 லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டு உள்ளன.

* ரூ.450 கோடி செலவில் டெல்டா மாவட்டங்களில் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது.

* உழவர் சந்தைகள் மூலம் தினமும் ரூ.10 கோடிக்கு விற்பனை நடைபெற்று 8 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுகின்றனர்.

* கடந்த 5 ஆண்டுகளில் 125 உழவர் சந்தைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

* கடந்த 5 ஆண்டுகளில் திருக்கோவில்களுக்கு சொந்தமான ரூ.2261 கோடி மதிப்பிலான 2307 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News