உள்ளூர் செய்திகள்

வேளாங்கண்ணியில் உத்திரிய மாதா ஆலயத்தில் தேர் பவனி நடந்தது.

உத்திரிய மாதா ஆலய தேர் பவனி

Published On 2022-07-16 09:52 GMT   |   Update On 2022-07-16 09:52 GMT
  • பேராலயத்திலிருந்து எழுந்தருளிய புனித உத்திரிய மாதா தேரினை மகாராஷ்டிர மாநிலம் மும்பை வசாய் கிறிஸ்தவ மீனவ பெண்கள் பாரம்பரிய முறைப்படி சுமந்து வந்தனர்.
  • தேர் நிலையை வந்தடைந்ததும் வசாய் கிறிஸ்தவ மீனவர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் உற்சாக நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித உத்திரிய மாதா ஆலய ஆண்டு திருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாலமாக துவங்கியது. மாதா கோவிலின் முக்கிய திருவிழாவான தேர்பவனி நடைபெற்றது.

பேராலய பங்கு தந்தை அற்புதராஜ் புனிதம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து பேராலயத்திலிருந்து எழுந்தருளிய புனித உத்திரிய மாதா தேரினை மகாராஷ்டிர மாநிலம் மும்பை வசாய் கிறிஸ்தவ மீனவப் பெண்கள் பாரம்பரிய முறைப்படி சுமந்து வந்தனர்.

தேரானது வேளாங்க ண்ணி கடற்கரை, உத்திரிய மாதா, ஆரியநாட்டு தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றபோது இருபுறமும் நின்றிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித உத்திரிய மாதா, செபஸ்தியர், அந்தோணியார் தேர் மீது மலர்களை தூவி தங்களுடைய பிரார்த்தனையை நிறைவேற்றினர்.

தேர் நிலையை வந்தடைந்ததும் வசாய் கிறிஸ்தவ மீனவர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் உற்சாக நடனம் ஆடி மகிழ்ந்தனர். வேளாங்கண்ணி புனித உத்திரிய மாதா ஆலய ஆண்டு திருவிழா நாளை காலை கொங்கனி மொழியில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு கொடியிறக்கத்துடன் நிறைவு பெறுகிறது.

Tags:    

Similar News