ஆடுகள் கடத்தி கைதானவாகள்.
காரில் ஆடுகள் கடத்திய இருவர் கைது
- தோப்புத்துறையில் 15 ஆடுகள் திருடு போனதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.
- இருவரிடமிருந்து 9 ஆடுகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தோப்பு தலையில் 15 ஆடுகள் திருட்டு போனதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.
இதையடுத்து வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், இன்ஸ்பெக்டர் பசுபதி, சப் -இன்ஸ்பெக்டர் இங்கர்சால்மற்றும் போலீ சார் தீவிர வாகன சோதனை யில் ஈடுபட்டனர்.
அப்போது வேகமாக வந்த சொகுசு காரை வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் 9 ஆடுகள் வாய் கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.இது குறித்து நடத்திய விசாரணையில், காரை ஓட்டி வந்தவர்கள் சென்னை திருவான்மியூரை சேர்ந்த காசிம் (வயது 33), மோத்திபாபு (43) என்பதும், வேதாரண்யம் பகுதியில் இருந்து ஆடுகளைதிருடி சென்னைக்கு விற்பனை க்காக கடத்தி செல்வதும் தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காசிம், மோத்திபாபு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 9 ஆடுகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.