தமிழ்நாடு செய்திகள்

#MKStalin தொல்காப்பியப் பூங்காவில் மனைவி துர்காவுடன் நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர்

Published On 2026-03-06 11:45 IST   |   Update On 2026-03-06 12:20:00 IST
  • வெளியூர் செல்லும்போதும் அங்கு நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
  • முதலமைச்சரின் புதிய நடைபயிற்சி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் உண்டு. தனது உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் அக்கறை கொண்ட அவர் தினமும் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். மேலும் நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார்.

வெளியூர் பயணங்களின்போது அங்கும் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். நடைபயிற்சியின்போது அப்பகுதி மக்களை சந்தித்து உரையாடுவது வாடிக்கையாக வைத்துள்ளார்.

 

இந்நிலையில் சென்னை அடையாறு தொல்காப்பியப் பூங்காவில் மனைவி துர்காவுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார்.

முதலமைச்சரின் புதிய நடைபயிற்சி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

Tags:    

Similar News