null
TNTET - 2026: பணிபுரியும் ஆசிரியர்களுக்கான 'டெட்' தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி- புதிய வகுப்புகள் மார்ச் 9-ந்தேதி தொடங்குகிறது
- அகாடமியில் படித்து இதுவரையில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழக அரசின் பல்வேறு முக்கிய பணிகளில் பதவி வகித்து வருகின்றனர்.
- ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் ஆன்லைன் வழியாக படித்தவர்கள் 2,106 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.
அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வருகின்ற ஆசிரியர்களுக்கான (டெட்) ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 9-ந்தேதி முதல் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அகாடமி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
பணிபுரியும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 2026-ம் ஆண்டுக்கான அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வருகின்ற ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பிப்.18-ந்தேதி முதல் ஏப்ரல் 10-ந்தேதி வரை பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி
ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி, கடந்த 19 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் சிறப்பான முறையில் பயிற்சி அளித்து வருகிறது. இந்த அகாடமியில் படித்து இதுவரையில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழக அரசின் பல்வேறு முக்கிய பணிகளில் பதவி வகித்து வருகின்றனர்.
டெட் தேர்வில் 2,106 பேர் தேர்ச்சி பெற்று சாதனை
சமீபத்தில் வெளியான ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளில் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் ஆன்லைன் வழியாக படித்தவர்கள் 2,106 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். அதேபோல, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 500க்கும் மேற்பட்டோர் இந்த அகாடமியில் படித்து வெற்றி பெற்று பணி நியமன ஆணைகளைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் பயிற்சி வகுப்பு
இந்நிலையில், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு புதிய ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் வருகிற மார்ச் 9-ந்தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த வகுப்புகள் தினசரி மாலை 6.30 முதல் 8.30 மணி வரை நடைபெறும். அதற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.
முன்பதிவு செய்க
இந்த பயிற்சி வகுப்பில் சேர, 'TNTET -2026: ONLINE COACHING FOR WORKING TEACHERS' என்று டைப் செய்து, தங்களது முழு முகவரியை 7550151584-என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது