உள்ளூர் செய்திகள்

மைதானத்தைச் சுற்றிலும் புதர் மண்டி உள்ளதை படத்தில் காணலாம். 

உடுமலை மாணவர்கள் விளையாட்டில் சாதிக்க அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம் சீரமைக்கப்படுமா?

Published On 2023-05-22 11:03 GMT   |   Update On 2023-05-22 11:03 GMT
  • பெரிய வாளவாடியில் நாராயணசாமி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.
  • நடப்பாண்டில் நடைபெற்ற 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.

உடுமலை :

உடுமலைஅடுத்த பெரிய வாளவாடியில் நாராயணசாமி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சின்ன வாளவாடி, பெரியவாளவாடி, பழையூர் அம்மாபட்டி, வடபூதிநத்தம் ,மொடக்குப்பட்டி, தீபாலபட்டி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மாண வர்கள் படித்து வருகிறார்கள்.

நடப்பாண்டில் நடைபெற்ற 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்தப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. ஆனால் விளையாட்டில் பின்தங்கி உள்ளது. மைதானம் போதிய பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி உள்ளது இதற்கு காரணமாகும். இது குறித்து சமூக ஆர்வ லர்கள் கூறுகையில்:- இந்தப் பள்ளி மைதானம் உடுமலை அளவில் பிரசித்தி பெற்றதாகும். குறிப்பாக கோடை காலத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் பரபரப்பாக நடைபெறும். ஆனால் சமீப காலமாக பள்ளி மைதானத்தை பராமரிப்பு செய்வதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக மைதானத்தைச் சுற்றிலும் புதர் மண்டி உள்ளது. இதனால் படிப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் விளையாட்டில் சாதிக்க முடியாத சூழல் உள்ளது. செல்போன் விளையாட்டில் குழந்தைகள் மூழ்கி வரும் சூழலில் தரமான மைதானம் இருந்தும் அதை முறையாக பராமரிக்காததால் குழந்தைகள்ஓடியாடி வியர்க்கவிறுவிறுக்க விளையாட முடியாத சூழல் உள்ளது. மைதானம் சிறப்பாக இருந்து முறையான பயிற்சி கிடைத்தால் கிராமத்து மாணவர்கள் விளையா ட்டில் மாவட்ட மாநில அளவில் சாதிக்கலாம்.

ஆனால்மைதானத்தை சீரமைக்கநிர்வாகம் அக்கறைகாட்டாதது வேதனை அளிக்கிறது. எனவே நாராயணசாமி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தை சீரமை ப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனால் படிப்பில்சாதித்த மாநிலமாணவர்கள் விளையாட்டிலும் சாதிக்க ஏதுவாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

Similar News