உள்ளூர் செய்திகள்

வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கிவைத்தபோது எடுத்தபடம்.

ரூ.51 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் - அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார்

Published On 2022-06-29 08:03 GMT   |   Update On 2022-06-29 08:03 GMT
  • தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நகராட்சி பகுதியில் ரூ.51 லட்சம் செலவில் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற்றது
  • ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்,

தாராபுரம் :

தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நகராட்சி பகுதியில் ரூ.51 லட்சம் செலவில் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற உள்ளது. இதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். விழாவிற்கு நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தலைமை தாங்கினார். அதன்படி காமராஜபுரம், இறைச்சி மஸ்தான் தெரு, பூளவாடி ரோடு, நாடார் தெரு, மணியம்மை நகர், சித்தார்த்தன் பாளையம், நாச்சிமுத்து நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறுபாலங்கள் அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல் மற்றும் ஆழ்குழாய் கிணறு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது.

அப்போது நகராட்சி ஆணையர் ராமர், நகர செயலாளர் கே.எஸ்.தனசேகர், நகராட்சி துணைத்தலைவர் ரவிச்சந்திரன், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் ராஜேந்திரன், துரை சந்திரசேகர், சக்திவேல், ஹைடெக் அன்பழகன், மலர்விழி கணேசன், ராசாத்தி பாண்டியன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News