உள்ளூர் செய்திகள்

திருப்பூர் அரசு சிக்கண்ணா கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் கலெக்டர் வினீத் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்திய காட்சி. போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் வினீத் ஏற்றுக்கொண்ட காட்சி.

திருப்பூர் மாவட்டத்தில் 75-வது சுதந்திர தினவிழா கோலாகல கொண்டாட்டம் - கலெக்டர் தேசிய கொடியேற்றி ரூ.1.40கோடி மதிப்பில் நல உதவிகளை வழங்கினார்

Published On 2022-08-15 05:19 GMT   |   Update On 2022-08-15 05:19 GMT
  • சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறா, பலூன் பறக்க விடப்பட்டது.
  • 258 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

திருப்பூர் :

இந்தியாவின் 75 -வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். இதையடுத்து சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறா, பலூன் பறக்க விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார்.

தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். அதன்படி திருப்பூர் மாநகர போலீசில் பணியாற்றும் 53 பேருக்கும் மாவட்ட போலீசில் பணியாற்றும் 40 பேருக்கும், தீயணைப்பு வீரர்கள் 10 பேர் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரிகள், சுகாதார பணியாளர்கள், மருத்துவ அதிகாரிகள், வேளாண் துறை, மாநகராட்சி ஊழியர்கள் என மொத்தம் 258 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பின்னர் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, விலையில்லா வீட்டு மனைபட்டா, தாட்கோ திட்டத்தின் மூலம் சுற்றுலா வாகனம், பயணிகள் ஆட்டோ, சரக்கு வாகனம், மாவட்ட தொழில் மையம் சார்பில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என ரூ.1 கோடியே 41 லட்சத்து 52 ஆயிரத்து 129 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வினீத் வழங்கினார்.

தொடர்ந்து திருப்பூர் மாவட்ட போலீஸ் மோப்பநாய்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.விழாவில் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், துணை கமிஷனர்கள் வனிதா, அபினவ் குமார் மற்றும் திருப்பூர் மாவட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News