நெல்லையில் இன்று காலை ரெயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை
- அந்தோணி தங்கராஜ் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
- ஜாக்சன், திடீரென செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
நெல்லை வண்ணார் பேட்டையை சேர்ந்தவர் அந்தோணி தங்கராஜ். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் ஜாக்சன்(வயது 36). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு சேரன் மகாதேவி அருகே உள்ள கங்கனாங்குளத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவ ருடன் திருமணமாகி தற்போது பாளை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகிறார்.
இந்நிலையில் இன்று அதிகாலை மகாராஜநகர் ரெயில்வே கேட் பகுதிக்கு வந்த ஜாக்சன், திடீரென அந்த வழியாக வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ஐகிரவுண்டு போலீசார் அங்கு விரைந்து வந்து விசா ரணை நடத்தினர். நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் ஜாக்சன் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்தி ரிக்கு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொ ண்டார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.