கோவையில் இன்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
- கோவை மாவட்டத்தில் இன்று காலை 10 மணிக்கு சிறப்பு முகாம் தொடங்கியது.
- மக்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்
கோவை,
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்கி உள்ளன. இதற்காக வரைவுப்பட்டியல் கடந்த 27-ந் தேதி வெளியிடப்பட்டது.
கோவை மாவட்டத்திலும் வாக்காளர் வரைவுபட்டியல் வெளியிடப்பட்டது. அதில், கோவை மாவட்டத்தில் 14,36,770 ஆண் வாக்காளர்களும், 15,51,665 பெண் வாக்காளர்களும், 569 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் என்று மொத்தம் 30,49,004 பேர் உள்ளனர்.
அன்றைய தினத்தில் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றன.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தங்களை மேற்கொள்ளும் விதமாக இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் கோவை மாவட்டத்தில் இன்று காலை 10 மணிக்கு சிறப்பு முகாம் தொடங்கியது.
வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்கும் வாக்குசாவடிகளுக்கு சென்று, அங்கு வைக்கப்பட்டுள்ள பட்டியலில் தங்களது பெயர் இருக்கிறதா? இல்லையா என்பதை சரிபார்த்தனர். அப்படி பெயர்கள் விடுபட்டிருந்தால், உரிய விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்தனர். இதேபோல் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்புபவர்கள், திருத்தம் செய்ய விரும்புவோர் அதற்கான விண்ணப்பத்தை வாங்கி நிரப்பி கொடுத்து விண்ணப்பித்தனர்.
சிறப்பு முகாமையொட்டி கோவையில் உள்ள அனைத்து வாக்குச்சாவ டிகளிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
அவர்கள் அங்கு பெயர் சேர்ப்பு, திருத்தம் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.
இந்த முகாமானது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. நாளையும் சிறப்பு முகாம் நடக்கிறது.கோவை