உள்ளூர் செய்திகள்

முதியவரிடம் பலகோடி ரூபாய் மதிப்பிலானசொத்துக்கான பட்டாவைதாசில்தார்சிவா.கார்த்திகேயன் வழங்கினார்.

ஜமாபந்தியில் தீர்வு: 50 ஆண்டுக்கு பின் பல கோடி சொத்தை மீட்ட முதியவர்

Published On 2022-06-18 09:39 GMT   |   Update On 2022-06-18 10:28 GMT
  • 50 ஆண்டுக்கு பின் பல கோடி சொத்தை ஜமாபந்தி மூலம் முதியவர் மீட்டார்.
  • பண்ருட்டி திருவதிகை உள்ள இவருக்குசொந்தமான நிலத்தை இவருக்கு பட்டா போட்டு சொத்தை இவரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று ஐகோர்ட்டு மூலமாக உத்தரவு பெற்று வந்தார்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சாத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவருக்கு 3 சகோதரர்கள். இவருக்கு பாத்திமான இவரது குடும்ப சொத்தை இவருக்கு தெரியாமல் இவரது சகோதரர் மூலமாக வேறு ஒருவர் வாங்கியுள்ளார். இவருக்கு அப்போது வயது17. இவருக்கு சொந்தமான இந்த சொத்தை மீட்க 17 வயதில் போராட்டத்தை தொடங்கினார். 50 ஆண்டுகளுக்குப் பிறகு இவரது போராட்டத்திற்கு வெற்றி கிடைத்தது.

இவரது தொடர் முயற்சியால் பண்ருட்டி திருவதிகை உள்ள இவருக்குசொந்தமான நிலத்தை இவருக்கு பட்டா போட்டு சொத்தை இவரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று ஐகோர்ட்டு மூலமாக உத்தரவு பெற்று வந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் ஜமாபந்தியில் தாசில்தார் சிவா கார்த்திகேயனிடம் முறையிட்டார். தாசில்தார் சிவா.கார்த்திகேயன் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இவருக்கு பட்டா வழங்கலாம்என்று ஐகோர்ட்டுக்கு கடிதம் எழுதினார். ஐகோர்ட்டு நீதிபதிகள் இவருக்கு பட்டாவழங்கஉத்தரவுபிறப்பித்தனர். இதனை தொடர்ந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவருக்கு பட்டா வழங்கப்பட்டது. பட்டா நகல் தாசில்தாரிடம் இருந்து பெற்ற முதியவர் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது. இது பற்றி அவர் கூறுகையில் 50 ஆண்டுகால போராட்டத்தில்எனது தம்பி ,எனது மகன் ஆகியோரை இழந்தேன் என்றார்.

Tags:    

Similar News