உள்ளூர் செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டம் நடந்தது.

ஊராட்சி மன்ற தலைவர்களுடன் திட்ட இயக்குநர் ஆய்வு

Published On 2022-09-23 06:56 GMT   |   Update On 2022-09-23 06:56 GMT
  • சிவகங்கையில் ஊராட்சி மன்ற தலைவர்களுடன் திட்ட இயக்குநர் ஆய்வு செய்தார்.
  • வேலை செய்யாமல் இருக்கும் அதிகாரிகளை கடிந்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் விரைந்து செயல்பட வேண்டும்.

சிவகங்கை

சிவகங்கை ஒன்றியத்திற்கு உட்பட்ட 43 ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் திட்ட இயக்குநர் சிவராமன் தலைமையில் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

இதில் திட்ட இயக்குநர் பேசுகையில், பல்வேறு ஊராட்சி மன்றங்கள் சிறப்பாக செயல்பட்டு அரசுக்கு வருவாய் வருகிறது. தற்போது பல ஊராட்சிகளில் பணிகளை விரைந்து முடிக்க ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நிர்வாக அனுமதி வழங்காமல் கிடப்பில் கிடக்கும் அனைத்து பணிகளையும் ஆராய்ந்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வேலை செய்யாமல் இருக்கும் அதிகாரிகளை கடிந்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் விரைந்து செயல்பட வேண்டும்.

பள்ளிக்கு தேவையான பிரேயர் தளம், பள்ளி கட்டிடம், சுற்றுச் சுவர், சமையல் கூடம் இல்லாத ஊராட்சிகளுக்கு பணி வழங்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றார். மேலும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தெரியாத அதிகாரங்களை விளக்கி கூறினார்.

இதில் கலந்து கொண்ட அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் திட்ட இயக்குநரை பாராட்டியதுடன் 3 மாதங்களுக்கு ஒரு முறை இது போன்று அழைத்து கூட்டம் நடத்தினால் பயனளிக்கும் என்று மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் மணிகண்டன் உட்பட அனைவரும் தெரிவித்தனர்.

இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரத்தினவேல், ஜெகநாத சுந்தரம் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News