உள்ளூர் செய்திகள்

முசுண்டப்பட்டி தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு பரிமாறி அமைச்சர் பெரியகருப்பன் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டம்

Published On 2022-09-17 08:20 GMT   |   Update On 2022-09-17 08:20 GMT
  • சிங்கம்புணரி அருகே தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் ெபரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
  • அதற்கு ஒரு மாணவி எழுந்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் முசுண்டப்பட்டி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் ெதாடக்கவிழா நடந்தது.

இதில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு கிச்சடி, கேசரி பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து அமைச்சர் பெரியகருப்பன்,கலெக்டர் மதுசூதன்ரெட்டி, அரசு முதன்மை செயலர் அமுதா ஆகியோர் மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டதுடன் மாணவர்களுடன் உரையாடினர்.

அரசு முதன்மை செயலர் அமுதா, உணவு எப்படி இருந்தது என்று கேட்டார். அதற்கு ஒரு மாணவி எழுந்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். மாணவி பிரதீஷா பேசுகையில், காலை உணவை சாப்பிட்டால் தான் நன்றாக படிக்க முடியும். நான் மருத்துவராகி உடம்பு

சரி இல்லாதவர்களை சரிசெய்வேன் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் வானதி, எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் அடைக்கலசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News